உறக்கம் என்பது ஏன் மனிதனுக்கு அவசியமான ஒன்றாகிறது . தெரிந்துகொள்ளுங்கள்

உறக்கம் என்றால் என்ன?

இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் செய்யும் பொதுவான வேலைகளில் உறக்கமும் ஒன்று . பொதுவாகமக்கள் உறக்கம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவை என்பதற்காக என்று நினைக்கின்றனர் . ஆனால் தூக்கத்தின்பொழுதுதான் உடலும் மனமும் அதிகமாக வேலைசெய்கிறது . மனிதன் சுயநினைவு ஆற்ற நிலையில் இருப்பதையேஉறக்கம் என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர் . மனிதன் சுயநினைவு அற்று இருக்கும் பொழுது மூளையால்உடலுக்குத் தேவையான சில அடிப்படை செயல்களை எளிதில் செய்யமுடிகிறது என்பதால் உடலுக்கு உறக்கம் என்பதுமிக அவசியமான ஒன்றாகிறது.
எடுத்துக்காட்டாக உங்களுக்குக் காய்ச்சல் என்று வைத்துக்கொள்வோம் . சாதாரண நாட்களைவிடக் காய்ச்சலின்பொழுது உடல் மிகச் சோர்வாக இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள் உங்கள் புலன்கள் சரியாக வேலைசெய்யாது காதுஅடைத்த மாதிரி இருக்கும் கை கால்களில் வலி இருக்கும் தலை சுற்றும். இது எல்லாம் உங்கள் மூளை உங்களை ஓய்வுஎடுக்க வைப்பதற்காகச் செய்கிறது . ஏனெனில் அப்பொழுது உங்கள் மூளைக்குச் சராசரியைவிட அதிக ஓய்வில் நீங்கள்இருக்கவேண்டும் . நீங்கள் சுயநினைவு அற்ற நிலையில் இருக்கும் பொழுதுதான் உங்கள் மூளையால் உடலில் உள்ளகிருமிகளை எளிதாக வெளியேற்ற முடியும்
உறக்கம் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது அவை
Rapid eye movement (REM) sleep
Non-REM sleep or slow wave sleep. credit: Dream Views
(REM) sleep என்பது உறக்கத்தின் பொழுது உங்கள் உடல் கூறுகள் அசைவில் இருக்கும் . உங்கள் கண்விழி தொடர்ந்துஅசைவில் இருக்கும் . பிரண்டு பிரண்டு படுப்பீர்கள் இந்த நிலையில் உங்கள் மூளை அதிகச் செயல்பாட்டில் இருக்கும் . கனவு வரும் . உளறுவீர்கள் . நிலையான சுவாசம் இருக்காது இந்த வகை உறக்கத்தை paradoxical sleep முரண்பாடானஉறக்கம் என்று அழைப்பார்கள்
credit: Wikipedia
Non-REM sleep இந்த வகை உறக்கம் பொதுவாக அதிகாலையில் வரும் அல்லது நீங்கள் அதிகச் சோர்வில் இருக்கும்பொழுதுவரும். இந்த உறக்கத்தின் பொழுது பொதுவாகக் கனவுகள் வருவது இல்லை இதனை ஆழ்ந்த உறக்கம் என்று அழைப்பர் credit: Wikipedia
REM & NON-REM sleep பொதுவாக 90 நிமிட இடைவெளிகளில் மாறி மாறித் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கும் ஒரு முழுநாள் உறக்கத்தின் முடிவில் 4 முதல் 6 சுற்றுகள் இந்த இரண்டு நிலையம் வந்து செல்லும் credit: Health Articles Magazine

நல்ல உறக்கம் உங்கள் உடல் மற்றும் மன நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் . அதனால் தூக்கத்தை விட்டுஉங்கள் வேலைகளைச் செய்யாதீர்கள் நன்றாக உறங்கி உங்கள் வேலைகளைச் செய்யுங்கள் அப்பொழுதுதான் உங்கள்வேலையை வேகமாகவும் நல்ல தரத்துடனும் எளிதிலும் செய்யமுடியும் .

Comments