இந்த பழக்கங்கள் கண்டிப்பாக வாழ்வில் உங்களை தோல்வி அடைய செய்யும்
நீங்கள் உங்கள் வாழ்கையை உற்று கவனித்து பார்த்தால் அதில் பெரும்பாலான உங்கள் பழக்கங்கள் அடுத்தவர்களிடம் இருந்து கற்றதாகவே இருக்கும் மனிதர்கள் தெரிந்தோ இல்லை தெரியாமலோ அடுத்தவரை பின்பற்றும் பழக்கம் கொண்டவர்கள் உங்களுடைய பெரும்பலான குணங்கள் உங்கள் உடன் பிறந்தவை அல்ல அது அடுத்தவரை நீங்கள் பார்த்து கற்றுக்கொண்டவை
இந்த கட்டுரையில் வாழ்வில் வெற்றி அடையாதவர்களுக்கான பொதுவான குணங்கள் குறிப்பிடப்படுகின்றன இவற்றில் ஒன்று இரண்டு குணங்கள் உங்களுக்கு இருக்கலாம் அதில் தவறுஇல்லை இங்கு யாரும் ஒழுங்கானவர்கள் இல்லை. இதில் குறிப்பிடும் நிறைய குணங்கள் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக அவற்றை மாற்றிக்கொள்ளுங்கள் அது மற்றவரிடம் கற்றுக்கொண்ட பழக்கம்தான் அதனால் அதை மாற்றுவது எளிது
what is success
கட்டுரைக்கு செல்லும் முன்பு முதலில் வெற்றி என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம் success பற்றி சாதித்தவர்கள் கூறுவது என்னவென்றால்
”a man is success if he gets up in the morning and gets to bed at night, and in between he does what he want to do”-Bob Dylon (musician)
மனிதனின் வெற்றி என்பது தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழும் பொழுது இன்று என்ன செய்யவேண்டும் என்று எடுக்கும் முடிவை அன்று இரவு படுக்கும் முன்பு முடித்துவிட வேண்டும் -Bob Dylon (musician)
திசை திரும்பிக்கொண்டே இருப்பீர்கள்
ஒரு முடிவை எடுத்தபின்பு அதற்க்கான கால அவகாசம் முடியும் வரை காத்திருக்க மாட்டார்கள் அதற்குள் அடுத்த முடிவை எடுத்து வேறு திசையில் செயல்பட தொடங்கிவிடுவார்கள் இவர்களுக்கு உடனே வளந்துவிட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். (ஆனால் உண்மையில் அப்படி யாரும் வளர்ந்துவிடமுடியாது வளர்ச்சி மட்டுமே மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் என்பதால் வெற்றியாளர் உழைப்பை யாரும் கவனிப்பது இல்லை)
பேசிக்கொண்டே இருப்பார்கள்
அதிகமாக எதிர் காலத்தையும் இறந்த காலத்தையும் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்களே தவிர நிகழ் காலத்தில் செயல்படுவது இல்லை. இவர்கள் 100% வெற்றியில் சிந்தனையின் பங்கு 1% என்பதை புரிந்து கொள்ளாதவர்கள்
எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் நேரத்தை செலவழிப்பது
நீங்கள் வசிக்கும் சுழல் உங்கள் குணத்தை பாதிக்கும் எதிர் மறை எண்ணம் கொண்டவர்களுடன் நீங்கள் அதிகமாக நேரத்தை செலவழித்தால் உங்கள் குணம் எதிர்மரையாகிவிடும் அது உங்களை ஏந்த செயலும் செய்யவிடாது
எல்லோரையும் வெறுப்பார்கள்
இவர்களுக்கு தன்னை நேசிக்கும் குணம் அதிகமாக இருக்கும் தனிமையில் அதிகமாக இருக்க விரும்புவார்கள் எல்லோர் குறைகளை உணர்ந்து அவர்களை வெறுப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்
செயலை தள்ளிப்போடுதல்
இவர்களுக்கு உடனடியாக செயலை செய்யும் பழக்கம் இருக்காது அதை நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே செல்வார்கள்
அடுத்தவர் சொல்வதை கேட்பதில்லை
இவர்களால் கூட்டத்துடன் இணைந்து செயல்பட முடியாது தங்கள் முடிவை அடுத்தவர்கள் விமர்சிக்க விரும்பமாட்டார்கள்
சோம்பேரித்தனம்
அடுத்தவர்களை விமர்சிப்பதில் நேரத்தை செலவளீப்பார்கள் இன்பமான மற்றும் பொழுதுபோக்கில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் இவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களை நம்பியே இருப்பார்கள்
கற்றுக்கொள்ளுதல்
இவர்களுக்கு புதியதை கற்றுக்கொள்ளும் பழக்கம் குறைவாக இருக்கும் படிப்பதில் புதியவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் குறைவாக இருக்கும்
click - Join my group
click- Like my Face book page:
click- Visit my blog:
இந்தக்கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share) பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்
Comments
Post a Comment