வீடு கட்டுபவர்கள் கவனத்திற்கு நாம் வீடுகட்டும் முறைதான் உலகின் அதிக செலவு கொண்ட முறைகளில் ஒன்று மாற்று முறைகளை பின்பற்றினால் உங்களால் (30-40)% சேமிக்கமுடியும்
நாம் வீடுகட்டும் முறைதான் உலகின் விலையுயர்ந்த சில வீடுகட்டும் முறைகளில் ஒன்று. ஏன் நமது வீடுகட்டும் முறை அவ்வளவு விலையுயர்ந்த முறை
1. நமது முறையில் அதிகமான பொருள் விரயம் உண்டு
2. அதிக கால அவகாசம் கொண்டது
3. அதிகபடியான மதிப்பு கூட்டு பொருட்கள் பயன்படுகின்றன
வீடு கட்டும்பொழுது செய்யகூடிய பொதுவான தவறுகள்
1 வீடுகட்ட ஆரம்பிதபின்பு திட்டத்தை மாற்றக்கூடாது இது தேவையற்ற பொருள் மற்றும் நேர விரயத்தை கொடுக்கும்
2. பொறியாளரை தேவையற்ற குழப்பத்திற்க்கு உள்ளாக்க்திர்கள் (பொறியாளரிடம் பொறுப்பை ஒப்படைதபின்பு அவரை குழப்பதிர்கள் )
3. மழைகாலங்களில் வீட்டை கட்ட வேண்டாம் (அது தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தி வேலை நாட்களை நீட்டிக்கும்)
4. வீட்டை போட்டு போட்டு கட்டுவதால் அதன் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பது பொய் குறித்த நேரத்தில் வீட்டை முடிப்பதே சிறந்தது
வீடு கட்டும் செலவை குறையக்க வழிமுறைகள்
வீடு கட்டும் பொழுது அதில் சிமென்ட் மற்றும் மணல் உபயோகத்தை குறைத்தால் அதன் கட்டுமான செலவு குறையும். சிமென்ட் மற்றும் மணலின் உபயோகத்தை குறைப்பதால் அதன் வலிமை குறையும் என்று என்னவேண்டாம் நாம் குறைப்பது விரயத்தை மட்டுமே
வீடுகட்டும் நாட்களின் எண்ணிக்கையை குறைத்தால் செலவை குறைக்கமுடியும்
வீடுகட்டும் ஆட்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் அதன் செலவை குறைக்க முடியும்
இது எல்லாத்தயு கொறச்சுட்டா நான் எப்படி ஒரு நல்ல வீடு கற்றது என்று நினைக்கலாம்
நீங்கள் வீடு கட்டும் முறையை மாற்றினால் இது எல்லாவற்றையும் குரைத்தும் உங்களால் தரமான வீடு கட்ட முடியும்
சரியான அஸ்திவார முறையை தேர்வு செய்யுங்கள்
அஸ்திவாரத்தை அடிப்படையாக நான்கு முறையாக பிரிக்கலாம்
· Slap foundation
· Pier foundation
· Wall foundation
· Column foundation
ஒவொரு முறையும் அதற்க்கு ஏற்றவாறு நன்மை தீமைகளை கொண்டுள்ளது உங்கள் இடம் மற்றும் உங்கள் திட்டத்திற்கு பொருந்தும் சிறந்த முறையை தேர்வு செய்யுங்கள். இதனால் தேவையற்ற பண விரையத்தை தவிர்க்கலாம்
செங்கல் பயன்பாட்டை தவிருங்கள்
செங்கல்
செங்கல் பொதுவாக எல்லா கட்டுமான வேலைக்கும் பயன்படுத்த படுகிறது இவற்றை தவிர்த்து interlocking bricks பயன்படுத்தலாம்
interlocking bricks என்பது சுடாத மண்ணால் செய்யப்படும் மாற்றி வடிவமைக்கப்பட்ட ஒரு வகையான செங்கல் இந்த செங்கல் சூளையில் சுடப்படுவது இல்லை அதற்கு பதில் அதிக அழுத்தம் கொண்டு உருவாக்க படுகிறது இதனால் உற்பத்தி செலவு குறைவு எனவே இதன் விலை செங்களைவிட குறைவு
இது மாற்றி வடிவமைக்கப்பட்ட செங்கல் என்பதால் ஒன்றின் மீது ஒன்று பொருந்தி கொல்லும் தன்மை கொண்டது. இவற்றை ஓட்ட வேண்டிய அவசியம் இல்லை இதனால் இதில் பயன்படுத்தும் சிமெண்ட் மணல் அளவு குறையும் இதனுடைய curing time குறைவு எனவே வேலை நாட்கள் குறையும்
இது ஒன்றின் மீது ஓன்று பொருத்தும் முறை என்பதால் இதற்கு குறைவான வேலை ஆட்கள் போதுமானது
பிளாஸ்டர் வோர்க் செய்வதை தவிருங்கள்
வீட்டின் வெளிப்புற சுவற்றில் பட்டி பார்ப்பது பிளாஸ்டர் வோர்க் போன்றவை செய்வதை தவிருங்கள் அதற்க்கு பதில் ரெயின் ப்ரூப் பூச்சை பூசுங்கள் இதனால் வீட்டின் சிமெண்ட் செலவு குறையும் வீடு குளுர்சியாக இருக்கும்
ரூபிங்
ரூபிங்-ல் செலவை குறைக்க சிறந்த இரண்டு முறைகள் உள்ளன
· Filler slap technology
· Block roofing
இரண்டும் ஒரே விதமான முறைகள்தான் அதில் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமே மாற்றம் கொள்கின்றன Filler slap technology-ல் ஓடு பயன்படுத்த படுகிறது. Block roofing-ல் சிமெண்ட் பிளாக் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு பொருத்தமான ஒரு முறையை தேர்வு செய்யுங்கள் இந்த முறைகளை பயன்படுத்துவதால் நிறைய பணத்தை உங்களால் சேமிக்க முடியும்
கூல் ரூபிங் நுட்பம்
கூரை அமைத்த பின்பு அதன் மீது கூல் ரூபிங் நுட்பத்தை பன்படுத்த மறக்கதிர்கள் கூல் ரூபிங் நுட்பம் என்பது உங்கள் கூரை மீது வெப்பத் தடுப்பணை அமைப்பது ஆகும் இது வீட்டின் மீது விழும் வெப்ப கதிர் வீச்சை எதிரோளிகிறது இதனால் வீட்டின் உள் வெப்பநிலை குறையும் இது உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைக்கும்.
இந்தக்கட்டுரை உங்களுக்கு
பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share)
பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்
Comments
Post a Comment